search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதுபாவாசத்திரம் அருகே ஆபத்தான நிலையில் இயங்கி  வரும் அங்கன்வாடி மையம்
    X

    அங்கன்வாடியில் மேற்கூரை சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும் காட்சி.

    சேதுபாவாசத்திரம் அருகே ஆபத்தான நிலையில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம்

    • அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.
    • பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

    இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் மேற்கூரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடத்தின் பல இடங்களில் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு தரையில் தண்ணீர் தேங்குகிறது.

    இதனால் இந்த கட்டிடத்தில் படிக்க வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    தற்போது அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியதா வது, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்க ன்வாடி கட்டிடம் கட்டும் வரை மாற்று இடத்தில் அங்கன்வாடி செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×