search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை செப்டம்பர் 11-ந் தேதி முதல் தொடங்குகிறது
    X

    தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை செப்டம்பர் 11-ந் தேதி முதல் தொடங்குகிறது

    • 8 ஆண்டுகளின் முடிவில் அன்றைய மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றி கொள்ளலாம்
    • ரிசர்வ் வங்கி மூலம் 2.5 சதவீதம் வட்டியுடன் 6 மாதங்களுக்கு ஒரு முறை வங்கி கணக்கில் செலுத்தப்படும்

    கோவை,

    கோவை அஞ்சல் கோட்டம் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை செப்டம்பர் 11-ந் தேதி முதல் தொடங்குகிறது.

    இந்திய அஞ்சல் துறை, ரிசர்வ் வங்கி உடன் இணைந்து குறிப்பிட்ட தேதிகளில் தங்க பத்திரம் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான விற்பனை கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 15-ந் தேதி வரை விற்பனை நடக்கிறது. 1 கிராம் தங்க பத்திரத்தின் விலை ரூ.5923.இதன் மூலம் ஒருவர் தம் வாழ்நாளில் 1 கிராம் முதல் 4 கிலோ வரை தங்க பத்திரங்களை வாங்கி கொள்ளலாம்.

    தங்க பத்திரத்தின் முதலீட்டு காலமான 8 ஆண்டுகளின் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றி கொள்ளலாம். இதன் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கியின் மூலமாக 2.5 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வருவாய் ஆகும்.

    தங்க பத்திரம் பெறுவதற்கு, முதலீட்டாளரின் விபரங்களை தங்க பத்திர விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, அத்துடன் ஆதார் நகல், பான் கார்டு நகல் மற்றும் வங்கி கணக்கின் விவரங்களை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பித்து தங்க பத்திரத்தை பெற்று கொள்ளலாம். பதிவு செய்த 15 நாட்களில் தங்க பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.தங்க பத்திரத்தில் முதலீடு செய்வதின் மூலம் செய்கூலி, சேதாரம் இல்லாமல் தங்கத்தை சேமிக்கலாம்.

    பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×