search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கள், சாராயம் விற்பனை
    X

    சின்னசேலம் பகுதியில் பதநீர் என்ற பெயரில் தென்னை மரங்களில் கள் இறக்க பல்லா கட்டப்பட்டுள்ளது.

    சின்னசேலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கள், சாராயம் விற்பனை

    • சின்னசேலம் அடுத்த கல்வராயன் மலைப் பகுதியில் சாராய ஊரல்கள் வைக்கப்பட்டு, கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • அரசால் தடை செய்யப்பட்ட சாராயம், கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பதநீர் சீசன் தொடங்கி யுள்ளது. அதன்படி சின்ன சேலம் அருகே உள்ள வி. அலம்பலம், பாக்கம்பாடி, தோட்டப்பாடி, கள்ளா நத்தம், தகரை, நாகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கப்படுறது.தமிழக அரசு பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறகக தடை விதித்துள்ளது. அதே சமயத்தில் பதநீர் இறக்க தடையில்லை. அனுமதி ஏதும் பெறத் தேவையில்லை. ஏனெனில் பதநீர் என்பது போதையற்ற ஆரோக்கிய பானமாகும்.இதனை பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் பனை மரத்தில் இருந்து பதநீரை இறக்கி, போதை தரும் பவுடர்களை கலந்து விற்பனை செய்கின்றனர். மேலும், தென்னை மரங்களில் பல்லாக்களை கட்டி நேரடியாகவே கள் இறக்கி விற்பனை செய்கின்றனர்.

    இதனை அருந்தும் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் ஒருசில மாணவர்கள் போதையிலேயே இருந்து வருகிறைனர் ஏற்கனலே, சின்னசேலம் அடுத்த கல்வராயன் மலைப் பகுதியில் சாராய ஊரல்கள் வைக்கப்பட்டு, கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பதநீர் என்ற பெயரில் கள் விற்பனையும் சின்னசேலம் பகுதியில் படு ஜோராக நடக்கிறது.போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும், இது குறித்து பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தவும் தமிழக போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சின்னசேலம் பகுதியில் பதநீர் என்ற பெயரில் கள் விற்பனையும், கள்ளச் சாராய விற்பனையும் நடக்கிறது.மேலும். ஒரு சில வாரங்களில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்க உள்ளன. வீட்டில் கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காலையிலேயே பதநீர் என்ற பெயரில் விற்கப்படும் கள் குடிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி தேர்வுக்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனை தடுக்க போலீஸ் துறை தனிப்படை அமைத்து சின்னசேலம் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட சாராயம், கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

    Next Story
    ×