என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்போன் டவரில் ஏறி நின்ற சிவகுமார்.
மேட்டூர் அருகே செல்போன் டவர் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
- சிவகுமார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை காணவில்லை என்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
- இந்த நிலையில் இன்று காலை சிவகுமார் திடீரென காவேரி கிராஸ் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறினார். ஆடுகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.
மேட்டூர்:
மேட்டூரை அடுத்த காவிரி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை காணவில்லை என்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரின்மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை சிவகுமார் திடீரென காவேரி கிராஸ் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறினார். ஆடுகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.
மேலும் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் விரைந்து வந்து சிவகுமாரை கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு அவர் மறுத்ததால் மேட்டூர் தீயணைப்பு படையினரை வரவழைத்து கீழே இறங்க செய்தனர்.
இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிவகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






