search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான2-ம் கட்ட பதிவு இன்று தொடங்கியது
    X

    மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக 2-வது கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி இன்று தொடங்கியது. சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் விண்ணப்பங்களை பதிவு செய்ய திரண்ட பெண்கள். 

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான2-ம் கட்ட பதிவு இன்று தொடங்கியது

    • சேலம் மாவட்டத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது‌.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

    டோக்கன் விநியோகம்

    இதற்காக கடந்த 20-ந் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

    இதில் 4 லட்சத்து 74 ஆயிரத்து 696 கார்டுகளுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்திற் கான முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    4 லட்சம் விண்ணப்பங்கள்

    இதையடுத்து பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலர்களுக்கு வழங்கப் பட்ட மொபைலில் உள்ள

    செயலியில் பதிவேற்றப்பட் டது. அதன்படி முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாமின் கடைசி நாளான நேற்று மாலை வரை சேலம் மாவட்டத்தில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 657 பேரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள் பெறப்பட்டு பதியப்பட்டுள்ளன.

    2-ம் கட்ட பதிவு

    2-ம் கட்ட விண்ணப்

    பதிவிற்காக ஏற்கனவே விண்ணப்பம் மற்றும்

    டோக்கன்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவு செய்யும் முகாம் இன்று காலை தொடங்கியது. 800-க்கும் மேற்பட்ட முகாம்களில் இந்த விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.

    ஆர்வத்துடன்

    நீண்ட வரிசையில் பெண்கள் ஆர்வத்துடன் காத்து நின்று விண்ணப்பங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதற்குள் 4 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×