என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓமலூர் அருகே மகளுக்கு பாலியல் ெதால்லை; தந்தை சிறையில் அடைப்பு
- ஓமலூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 43 வயது நிரம்பிய லாரி டிரைவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
- இந்த நிலையில் மூத்த மகளான 17 வயது சிறுமி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 43 வயது நிரம்பிய லாரி டிரைவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மனைவிக்கு கண் பார்வையில் கோளாறு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூத்த மகளான 17 வயது சிறுமி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது தந்தை தான் 6-ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து தனக்கு பாலியல் தொல்லை ெகாடுத்து வருகிறார். இது பற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தெரிவித்தேன். போலீசார் எனது தந்தையை அழைத்து எச்சரித்து அனுப்பினார்கள். அப்போது எனது தந்தை இனிமேல் இது பற்றி வெளியே சொன்னால் என்னையும் எனது அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனால் நான் பயந்து எனது சித்தி வீட்டுக்கு சென்றேன். அங்கேயும் வந்து எங்களை அடித்து விரட்டினார். எனவே எனது தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






