என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்த பதிவுச்சான்று பெறுவது கட்டாயம்
- பதிவுச்சான்று இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அதற்கு தடைவிதிப்பதோடு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
- மேலும், பதிவு சான்று பெறுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களின் தற்போதைய விவரங்களை https://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.
சேலம்:
சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு முன்னர் சம்ந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநரிடம் பதிவுச்சான்று பெற்ற பின்புதான் பணியமர்த்த வேண்டும்.
பதிவுச்சான்று இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அதற்கு தடைவிதிப்பதோடு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும், பதிவு சான்று பெறுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களின் தற்போதைய விவரங்களை https://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட விவரத்தினை dcifsalem@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சாப்ட் காப்பி ஆகவும் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம், 27/2 ஏ 2, காந்தி ரோடு, வருமான வரித்துறை அலுவலகம் அருகில், சேலம்-636007. என்ற முகவரிக்கு அதன் நகல்களை அனுப்புமாறு சேலம், தொழிலக பாதுபாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளிமாநிலத் தொழிலாளர்களில் பணியின்போதும், பணியில் இல்லாமல் ஓய்வின் போதும் மற்றும் இரவு நேரங்களிலும் உயிருக்கு கேடு ஏதும் ஏற்படாவண்ணம் பாதுகாப்பது தொழிற்சாலை நிர்வாகங்கள் உரிய முறையில் கண்காணித்திட வேண்டும், வேறு ஏதாவது நேர்ந்தால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவகல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இது குறித்து சேலம், ராசிபுரம், நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகாக்க ளை சேர்ந்தவர்கள் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் தினகரனை 9597386807, 9445869224 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு தாலுக்காக்களை சேர்ந்தவர்கள் மேட்டூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநரை 9445869225 என்ற எண்ணிலும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தினர் ஓசூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் சந்திரமோகனை 9994847205 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்