என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தலை துண்டித்து தொழிலாளியை கொன்ற ரவுடி கைது
- சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது
- கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தலையை கைப்பற்றியதுடன் உடலையும், கொலையாளியையும் தேடினர். தொடர்ந்து தலை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் குள்ளம்பட்டி பள்ளக்காட்டை சேர்ந்த பிரபல ரவுடியான திருமலை (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் உடலை அங்குள்ள நாட்டாமங்கலம் ஏரிக்கரையில் வீசியதாக தெரிவித்தார். அதன்படி அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.
திருமலை கொடுத்த தகவலின்பேரில் அவரது பைக் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமலை கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது - பிரபல ரவுடியான திருமலை நேற்று முன்தினம் பைக்கில் வாழப்பாடி முத்தம்பட்டி சென்றார். அங்கு விவசாய தோட்ட பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த முத்தம் பட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி ஜோதி 45 என்பவரை மிரட்டி ஒன்றரை பவுன் நகையை பறித்தார்.
அங்கிருந்து நடுப்பட்டி வழியாக வந்த போது சாலையில் நடந்து வந்த குமார் மீது மோதுவது போல சென்று தகராறு செய்தார். பின்னர் இரு வரும் சமரசம் ஆகிய நிலையில் தன்னுடன் வந்தால் மது வாங்கி தருவதாக கூறி குமாரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு நீர்முள்ளிக் குட்டை சிவசக்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கினர்.
பின்னர் இருவரும் அக்ரஹாரம் நாட்டாமங்கலம் ஏரிக்கரைக்கு வந்து மது அருந்தினர். அப்போது 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த திருமலை, குமாரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து தலையை அறுத்து குள்ளம்பட்டி பிரிவு சாலையில் வீசி விட்டு சென்றதும், அங்குள்ள சி.சி.டி.சி. காமிரா பதிவால போலீசாரிடம் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துஅவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டு உள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ைகதான பிரபல ரவுடி ஏற்கனவே 2 கொலைகள் செய்துள்ள நிலையில் தற்போது சிறிய பிரச்சினையில் ஒருவரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பீதி நிலவி வருகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடும்நிலை உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்