என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு
- கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
- தற்போது நுழைவு வாயில்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வேகமாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் கோட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று வருவாய்த்துறையினர் மற்றும் இந்து அறநிலைத்துறை மற்றும் திருத்தண்டர் சபை நிறுவனர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் போது கோவிலின் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டிடங்களின் தன்மை தொடர்பாகவும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், கோவிலில் ஒவ்வொரு திருவிழாவின்போதும் பல்லாயிரம் பேர் பொங்கல் இடுவார்கள். ஆனால் கோயிலில் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக பக்தர்கள் வெளியேறும் வகையில் வாசல்கள் பெரிய அளவில் முன்பு இருந்தது.
தற்போது நுழைவு வாயில்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வேகமாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. கட்டிடங்கள் இடிந்து விடும் நிலையில் உள்ளதால் விபத்து சூழல் உள்ளது.
எனவே இதுகுறித்து வருகிற 15-ந் தேதி அறிக்கையாக தயாரித்து சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிப்போம். பின்னர் கோர்ட் உத்தரவு படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.