என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சேலம் பஸ், ரெயில் நிலையத்தில் அலை மோதிய மக்கள் கூட்டம்
- ஆயுத பூஜை நாளை மறுநாள் திங்கட் கிழமையும், செவ்வாய்க்கிழமை விஜய தசமியும் வருகிறது.
- இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் தங்கி பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
சேலம்:
ஆயுத பூஜை நாளை மறுநாள் திங்கட் கிழமையும், செவ்வாய்க்கிழமை விஜய தசமியும் வருகிறது. அதற்கு முந்தைய நாட்களான சனிக் கிழமையான இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அலை மோதிய கூட்டம்
இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் தங்கி பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் பஸ்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் இருந்தது.
குறிப்பாக சேலத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், புதுச்சேரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் அதிக அளவில் குவிந்து இருந்தனர்.
இதே போல சென்னை, கோவை, பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக சென்ற பஸ்களிலும் கூட்டம் அலை மோதியது. இதையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் முண்டியடித்த படி பயணிகள் ஏறி சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாலும், தனியார் ஆம்னி பஸ்களும் வெளியூர்களுக்கு அதிக அளவில் இயக்கப்பட்டதாலும் புதிய பஸ் நிலையத்தை சுற்றி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல தென் மாவட்டங்களுக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழி யர்களின் வாகனங்கள் சென்றதால் ஏ.வி.ஆர். ரவுண்டானா, திருவாக்க வுண்டனூர், கந்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் அதிக அளவில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.
ரெயில்கள்
இேத போல சேலம் வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவைக்கு சென்ற ரெயில்களில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது . முன்பதிவில்லாத பெட்டிகளில் முண்டியடித்த படி பயணிகள் ஏறி சென்றனர். இன்றும் அனைத்து ரெயில்களிலும் அதே நிலை நீடித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்