search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மண்டலத்தில 2 நாளில் ரூ.86.40 கோடிக்கு மது விற்பனை
    X

    தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மண்டலத்தில 2 நாளில் ரூ.86.40 கோடிக்கு மது விற்பனை

    • தமிழகத்தில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகளவு இருந்து வருகிறது.
    • சேலம் மண்டலத்தில் 11ம் தேதி ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி நாளான 12ம் தேதியில்மிக அதிகபட்சமாக ரூ.46.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது.

    சேலம்:

    தமிழகத்தில் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகளவு இருந்து வருகிறது. நடப்பாண்டு தீபாவளியையொட்டி கூடுதல் மதுபானங்களை கொள்முதல் செய்து, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதியும், தீபாவளி நாளான 12ம் தேதியும் மனுபானங்கள் அதிகளவு விற்பனையாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 2 நாளில் ரூ.467 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. சேலம் மண்டலத்தை பொறுத்தமட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் சுமார் 900 டாஸ்மாக் மது பான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தீபாவளியையொட்டிய 2 நாட்களிலும் பிராந்தி வகைகள், பீர் வகைகளை மதுபிரியர்கள் அதிகளவு வாங்கிச் சென்றனர். இதனால், சேலம் மண்டலத்தில் 11ம் தேதி ரூ.39.78 கோடிக்கும், தீபாவளி நாளான 12ம் தேதியில்மிக அதிகபட்சமாக ரூ.46.62 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையானது. 2நாளிலும் சேர்த்து, ரூ.86.40 கோடிக்கு மது பானங்கள் விற்பனையாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகம் என டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×