என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய தொழில்நுட்பத்தில் தயாராகும் விநாயகர் சிலைகள்
- விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு, விற்பனை களை கட்டியுள்ளது.
வாழப்பாடி:
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு, விற்பனை களை கட்டியுள்ளது.
பொதுவாகவே விநாயகர் சதுர்த்தியன்று பல்ேவறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிப்படுவார்கள். பின்னர் விழா முடிந்ததும் மேள, தாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பட்டதாரி இளைஞர் பாலாஜி(36) மற்றும் இவரது சகோதரர் முத்துக்குமார் (34) உள்ளிட்ட குடும்பத்தினர், புதிய தொழில்நுட்பத்தில் விதமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நெருங்கியுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை வடிவமைத்து வண்ணம் தீட்டும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இவர்கள் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விநாயகர் சிலை பாகங்களை கொள்முதல் செய்து கொண்டு வரும் இவர்கள் கைவினைக் கலைஞர் களுடன் ஒருங்கிணைந்து நவீன தொழில்நுட்பத்தில் பாகங்களை ஒட்டவைத்து, வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து வண்ணம் தீட்டி அனுப்பி வைத்து வருகின்றனர்.
நவீன தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் விநாயகர் சிலைகளை பார்வையிட விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரும் இளை ஞர்களும் படைடுத்து வருகின்றனர்.
இது குறித்து கைவினைக் கலைஞர் பாலாஜி கூறியதாவது:-
எனது பெற்றோர்களுக்கு மண்பாண்டங்கள் செய்வது குலத்தொழிலாகும். தற்போது மண்பாண் டங்களுக்கு போதிய வரவேற்பும், வருவாயும் இல்லை. இருப்பினம் ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ள நானும், எனது சகோதரரும் குலத் தொழிலை கைவிட மனமின்றி, கைவினைக் கலைஞர்களை ஒருங்கி ணைத்து மண் பாண்டத் தொழிலுக்கு இணையான, நவீன தொழில் நுட்பத்தில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறோம். ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே இத்தொழிலில் வருவாய் ஈட்ட முடியும் என்ற போதிலும், மன நிறைவு கிடைப்பதால் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்வதில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறோம்.
விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ள நிலையிலும், வாடிக்கை யாளர்கள் விரும்பு வகையில், மிக நேர்த்தியாக விநாயகர் சிலை வடி வமைத்து கொடுப்பதால், தமிழகம் முழுவதும் இருந்துஆர்டர்கள் குவிந்து வருகிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்