என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கெங்கவல்லி அருகே தடுப்பணையை பொதுமக்கள் முற்றுகை
- கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 அடி அகலத்தில் 150 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
- இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களாக கட்டப் பட்டு வந்தாலும், தரம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 அடி அகலத்தில் 150 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களாக கட்டப் பட்டு வந்தாலும், தரம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஒப்பந்ததாரரிடம் முறையிட்ட மக்கள், தடுப்பணையை தரமானதாக கட்டும்படி வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பணை கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தடுப்பணையை தரமான தாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத் தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதன்பிறகு பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.