என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காருவள்ளி பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
- கோவிலை சுற்றி அடர்ந்த மரங்கள் உள்ளன.இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை கோவிலை சுற்றியுள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
- இதில் 3 ஆடுகள் திடீரென காணாமல் போனது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காருவள்ளி ஊராட்சியில் வெங்கட்ரமண கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி அடர்ந்த மரங்கள் உள்ளன.இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை கோவிலை சுற்றியுள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீனி என்பவர் தனது ஆடுகளை மேச்சலுக்காக அவிழ்த்து விட்டதாக தெரிகிறது. இதில் 3 ஆடுகள் திடீரென காணாமல் போனது. இதையடுத்து ஆடுகளை தேடியபோது அங்குள்ள கரட்டு பகுதியில் 3 ஆடுகளும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதை பார்த்து சீனி அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக சீனி டேனிஷ்பேட்டை அலுவலர் தங்கராஜூக்கு தகவல் கொடுத்தார். மர்ம விலங்கு நடமாட்டம் இருந்தால் கால்தடம் பதிந்து இருக்கும். அப்படி இருந்தால் இந்த பகுதியில் முகாமிட்டு மர்ம விலங்கை பிடித்து விடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.