search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கோட்டை பெண்கள் பள்ளியில்  மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு
    X

    சேலம் கோட்டை பெண்கள் பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு

    • சேலம் கோட்டை பெண்கள் பள்ளியல் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • பள்ளியில் மாணவிகளுக்கு போதுமான கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லை என்றும், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வில்லை என்றும் புகார்கள் எழுந்தது.

    சேலம்:

    சேலம் கோட்டை பெண்கள் பள்ளியல் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளியில் மாணவிகளுக்கு போதுமான கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லை என்றும், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வில்லை என்றும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோ ர்களும் தலைமை ஆசிரியரிடம் பல முறை புகார் கொடுத்தனர். ஆனாலும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் மாணவிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி மோகன் இன்று காலை பள்ளியில் உள்ள கழிவறை மற்றும் குடிநீர் தொட்டி களையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரி யரிடமும் விசாரணை நடத்தி வரு கிறார். இத னால் பள்ளியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×