என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்கும்பாபிஷேகம் தமிழில் நடத்த வேண்டும்
- சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வருகிற 27ந் தேதி கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட இருக்கிறது.
- அப்போது கும்பாபிஷேக விழாவில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
சேலம்:
தமிழக சட்டசபையில் அருள் எம்.எல்.ஏ. தனது தொகுதி குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் கடந்த ஆண்டு சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வருகிற 27ந் தேதி கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்தப்பட இருக்கிறது. அப்போது கும்பாபிஷேக விழாவில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். சேலம் மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? என அருள் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் 2014-ம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணி தொடங்கப்பட்டது. தி.மு.க. அரசு வந்த பிறகு பிறகுதான் 2 ஆண்டுகளில் திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. நான் 3 முறை கோவிலுக்கு ஆய்வுக்கு சென்றேன். வருகிற 27-ந் தேதி காலையில் கும்பாபிஷேக விழாவும், மாலையில் திருத்தேர் பவனியும் நடைபெற இருக்கிறது. அன்று நிச்சயமாக கும்பாபிஷேக விழா தமிழில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.