என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சேலத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் சேலத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/16/1951277-12.webp)
சேலத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.
- கூட்டத்தில் ஆசிரியர்கள் பணிப்பதிவேடு மட்டும் எமிசில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.
மாவட்டச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். பொருளாளர் சுரேஷ் குமார் வரவேற்றார். செய்தி தொடர்பாளர் சண்முகம், சட்ட செயலாளர் மோகன், மகளிர் அணி அருள்மொழி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஆசிரியர்கள் பணிப்பதிவேடு மட்டும் எமிசில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதர எமிஸ் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்துவதை முற்றிலும் கைவிட வேண்டும். பணி பாதுகாப்பு சட்டம்இயற்ற வேண்டும். ஆசிரியர்களின் பணி வரன் முறை, தகுதி தான் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற கருத்துக்கள் மீது உடனடி தீர்வு காண மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமை குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.