search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை  வழங்கப்படும்
    X

    மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்

    • பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
    • 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இதர பிற்படுத்தப் பட்டோர், பொருளா தாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9-ம் வகுப்பு, 11 -ம் வகுப்பு பயின்றுவரும் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப் படும் எனவும் அதில் குறிப்பி டப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 29.09.2023 அன்று நடத்தப்பட விருந்த யசஸ்வி நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர் என தெரிவிக்கப்ப ட்டிருந்த நிலையில் தற்போது எழுத்து தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும், 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க தகுதியான வர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்ப டையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகை யானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட https://scholarships.gov.in மற்றும் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) தொடர்ந்து நோக்கி கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×