search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை விற்பனை செய்த 13 மளிகை, பெட்டி கடைகளுக்கு சீல்
    X

    புகையிலை விற்பனை செய்த 13 மளிகை, பெட்டி கடைகளுக்கு 'சீல்'

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    தீவிர நடவடிக்கை

    இதையடுத்து உணவு பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தீவிரமாக கண்காணித்து சீல்வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் புகையிலை பொருட்கள் விற்கப்படும் கடைகளை கண்காணித்து சமீபத்தில் அதிரடி சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 13 கடை உரிமை யாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் சேலம் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டியில் ஒரு மளிகை கடை, ஓமலூர் அருகே செலவடையில் ஒரு மளிகை கடை, எடப்பாடி, ஜலகண்ட ாபுரம் பிரதான சாலையில் ஒரு மளிகை மற்றும் ஒரு பீடா கடை, பெரியசோரகை மாட்டுக்காரன் வளைவில் 2 பெட்டிக்கடைகள், நங்கவள்ளியில் ஒரு பெட்டிக்கடை உள்பட 13 பெட்டி கடைகளுக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    இன்றும், நாளையும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ள தால் தற்போது அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து நாைள மறுநாள் திங்கட் கிழமை முதல் இந்த 13 கடைகளும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரி பேட்டி

    இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் கூறுகையில், கடந்த 2022-2023-ம் ஆண்டில் 33 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் புகையிலை விற்று கடை உரிமையாளர்கள் சிக்கினால் அந்த கடைகள் சீல் வைக்கப்படுவதுடன், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் 13 கடைகள் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×