என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓமலூர் அருகே கோவில் உண்டியல் திருட்டு பூசாரியே பூட்டை உடைத்து திருடியது சி.சி.டி.வி. கேமிரா மூலம் அம்பலம்
- இந்த கோவிலில் தை மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் விஷேச பூஜைளும் நடத்தப்படும்.
- கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில் பழமையான முத்தாளம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் தை மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் விஷேச பூஜைளும் நடத்தப்படும்.
கோவிலுக்கு சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.
உண்டியல் திருட்டு
இக்கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னண்ணன் என்கின்ற வெள்ளையன் என்பவர் பூசாரியாக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் இந்த கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தாத்தியம்பட்டியை சேர்ந்த கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவில் நிர்வாகிகள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
சி.சி.டி.வி கேமிரா
அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
இதில் முத்தாளம்மன் கோவிலின் பூசாரி வெள்ளையன் கோவிலில் இருந்த வேலை பயன்படுத்தி பூட்டை உடைத்து உள்ளே செல்வதும் பின்னர் அங்கிருந்த உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அதிர்ச்சி
இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பூசாரி வெள்ளையனை பிடித்து ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூசாரி வெள்ளையனை கைது ெ சய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் பூசாரியே உண்டியல் உடைத்து பணத்தை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்