என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் வழியாக கேரளா சென்றரெயிலில் 4 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
- தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஏகியா (28), சுகில்தேவ் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்துவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த ரெயிலில் இன்று அதிகாலை ஜோலார் பேட்டையில் இருந்து சேலம் ஜங்சன் வரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பொது ரெயில்பெட்டியில் சீட் எண் 45-க்கு கீழ் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 பேக்குகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஏகியா (28), சுகில்தேவ் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஒடிசா மாநிலம் பெரம்பூர் பகுதிக்கு சென்று 4 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.