என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி:சேலம் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற 657 வீரர், வீராங்கனைகளும் சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்குபெற சென்றனர்.
சேலம்:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் நடைபெற்றது. இதில் நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், மேசைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட், தடகளம், கால்பந்து, கபடி, சிலம்பம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 657 வீரர், வீராங்கனைகளும் சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்குபெற சென்றனர்.
இதில் முதற்கட்டமாக கடந்த 29-ந்தேதி சேலம் மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி பிரிவைச் சார்ந்த கபடி, வாலிபால் ஆண், பெண் அணிகளும், பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த சிலம்பம் ஆண், பெண் அணிகள் என 64 மாணவ, மாணவிகள் சேலத்திலிருந்து சென்னை சென்றனர்.
இதில் கல்லூரி அளவில் சுருள்வாள் வீச்சுப் பிரிவில் ஜாக்சன் வெள்ளிக் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை, அலங்கார வீச்சுப் பிரிவில் குமரேசன் வெள்ளிக் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையும்,
சுருள்வாள் வீச்சுப் பிரி வில் மல்லூர் அரசு பள்ளி யில் பயிலும் கிருஷ்ண மூர்த்தி வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை, மேச்சேரி அரசுப் பள்ளியில் பயிலும் ஓவியா ஸ்ரீ வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை, கல்லூரிப் பிரிவில் ஜெனிபர் வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்று வெற்றி பெற்றனர்.
சிலம்பம் பிரிவில் சேலம் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களைப் பெற்று வந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மாவட்ட கலெக்டர் கார்மே கம் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் எஸ்.சிவரஞ்சன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்