என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அருகே பரபரப்பு 3 மாத கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை
- எடப்பாடி மேட்டு தெருவை சேர்ந்த பிரபாகரன் - சரஸ்வதி தம்பதியின் மகள் சந்தியா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
- மாமியா ருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. சம்ப வத்தன்றும் சந்தியா திடீரென வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சின்னசோரகை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் பழனி (30) கோவையில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை செய்து வருகிறார்.
3 மாத கர்ப்பிணி
இவருக்கும், எடப்பாடி மேட்டு தெருவை சேர்ந்த பிரபாகரன் - சரஸ்வதி தம்பதியின் மகள் சந்தியா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் சந்தியா 3 மாத கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில் சந்தியா விற்கும் அவரது மாமியா ருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. சம்ப வத்தன்றும் சந்தியா திடீரென வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த நங்கவள்ளி போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சந்தியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மேட்டூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு சந்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
பின்னர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ தணிகாச்சலம், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஜலகண்டா புரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் சந்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், கணவர் பழனியிடம் இருந்து சந்தியாவின் பெண் குழந்தைக்கு உரிய நிவாரணம் பெற்று தருவதாகவும் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்