search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் சிறப்பு முகாம்களில் பயோ மெட்ரிக் மூலம் பெயர் பதிவு
    X

    சேலம் மணக்காடு அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த பெண்கள் உரிமை தொகை வழங்குவதற்கான விண்ணப்ப பதிவு முகாமில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க குவிந்த பெண்களை படத்தில் காணலாம்.

    சேலத்தில் சிறப்பு முகாம்களில் பயோ மெட்ரிக் மூலம் பெயர் பதிவு

    • மகளிர் உரிமை தொகை பெற சேலத்தில் சிறப்பு முகாம்களில் பயோ மெட்ரிக் மூலம் பெயர் பதிவு நடந்தது.
    • ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.

    சேலம்:

    சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்ப டும் என வாக்குறுதி அமைக் கப்பட்டது.

    இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்ட நிலையில் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்

    தொடங்கப்படும்என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்திருந்தார்.

    விண்ணப்பம்

    இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப் பம் மற்றும் டோக்கன் விநியோகம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் விண் ணப்ப பதிவு முகாம் தொடங்கி யது. இதையொட்டி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்ப பதிவு முகாமை தொடங்கி வைத்தார்.

    ஆயிரம் முகாம்

    இதை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் உள்ள 11 லட்சம் கார்டுகளில் 500 கார்டுகளுக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் அரசு பள்ளிகள், திருமண மண்டபங்களில் 1000-க்கும் மேற்பட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று தொடங்கியது. இதையொட்டி, டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தின் படி பொதுமக்கள் முகாம்களில் குவிந்தனர்.

    அவர்களிடம் முதலில் ஆதார் எண் பதியப்பட்டது. பின்னர் விரல் ரேகை பயோ மெட்ரிக் கருவி மூலம் சரி பார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு சரியாக அமை யாத வர்களுக்கு ஆதார் அட்டை யுடன் இணைக்கப் பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறப்பட்டு பதிவு ெசய்யப்பட்டது. பின்னர் விண்ணப்பங்களுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டது.

    இந்த பணியில் வட்ட வழங்கல் துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட் டுள்ளனர். இந்த முகாம் நடைபெறும் சில இடங்க ளில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் மாவட்ட வழங்கல் துறை அதிகாரி களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தகுதி உள்ள அனை வருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×