search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் இன்று அரசு கலை, அறிவியல் கல்லூரி திறப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் இன்று அரசு கலை, அறிவியல் கல்லூரி திறப்பு

    • தலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங் கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • அதன்படி இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் திறக்கப்பட்டு, 2023-2024- ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ உள்ளிட்ட பல்வேறு இளநிலை பட்டப் படிப்புக்கான முதலா மாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப் பப் பதிவு சமீபத்தில் தொடங்கி முடிவடைந்தது. இக்கல்லூரிகளில் 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–க–ளுக்கு நடப்பாண்டு 2 லட்–சத்து 46 ஆயி–ரத்து 295 பேர் விண்–ணப்பித்தனர்.

    விண்–ணப்–பித்–த–வர்–க–ளுக்–கான தர–வ–ரிசை பட்–டி–யல் கடந்த மே மாதம் 25-ந் தேதி வெளி–யி–டப்–பட்–டது. அதன் பிறகு கலந்–தாய்வு நடை பெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவிக ளுக்கு அட்மிஷன் ஆணை வழங்கப்பட்டது.

    இதனால் சேலம் பெரி யார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் செயல்படுடும் 22 அரசு கல்லூரிகளில் இடங்கள் நிரம்பின.

    இந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங் கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் திறக்கப்பட்டு, 2023-2024- ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.

    முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ- மாணவிகள் இன்று கல்லூரி முதல் நாள் என்பதால் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர்.

    பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர். அவர்களை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

    மேலும் வகுப்பு பேராசி யர்கள், பேராசிரியைகளும், மாணவ- மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்திருந்தனர்.

    இன்று கல்லூரி முதல் நாளையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப் பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது.

    Next Story
    ×