என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட்
- மேட்டூர் நகராட்சி பொறி யாளர் மணிமாறன், நக ராட்சி ஆணையாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
- நேற்று (30-ந் தேதி) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி பொறி யாளர் மணிமாறன், நக ராட்சி ஆணையாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். நேற்று (30-ந் தேதி) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மணிமாறன் நங்கவள்ளி பேரூராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றியபோது, பேரூராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா நகராட்சி பொறியாளர் மணிமாறனை சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story






