search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. கட்டாயமில்லை
    X

    கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. கட்டாயமில்லை

    • சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.
    • 2021 -ம் ஆண்டு ‌ஜூலை -2023 ஜூலை வரை உதவி பேராசிரியர் நியமனத்திற்கு பிஎச்.டி. கட்டாயமில்லை என யு.ஜி.சி. அறிவித்தது.

    சேலம்:

    தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகம் முழுவதும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

    சேலம், நாமக்கல்

    இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.

    இைதத்தவிர அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், ஆசிரியர் கல்வியில் கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள் உள்ளன. மேலும் சேலத்தில் தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழகமும் ெசயல்பட்டு வருகிறது.

    பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேர பிஎச்.டி. படிப்பு கட்டாயம் என கடந்த 2018-ல் மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அறிவித்தது. இதையடுத்து 2021-2022 கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறையை பயன்படுத்தி உதவி பேராசிரியர்களை நியமனம் செய்யும்படி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டது.

    ஆனால், கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மாணவர்களால் பிஎச்.டி படிப்பை தொடர முடியவில்லை. இதனால் 2021 -ம் ஆண்டு ஜூலை -2023 ஜூலை வரை உதவி பேராசிரியர் நியமனத்திற்கு பிஎச்.டி. கட்டாயமில்லை என யு.ஜி.சி. அறிவித்தது.

    புதிய அறிவிப்பு

    இந்த நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியில் சேர பிஎச்.டி. படிப்பு கட்டாயமில்லை. நெட், செட், ஸ்லெட் ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என யு.ஜி.சி. நேற்று அறிவித்துள்ளது.

    Next Story
    ×