என் மலர்
உள்ளூர் செய்திகள்

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா; 24 பேர் கைது
- சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 தலைமுறை களாக வசித்து வருகின்றனர்.
- அய்யம்பெரு மான்பட்டியல் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தினர்.
சேலம்:
சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 தலைமுறை களாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அய்யம்பெரு மான்பட்டியல் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தினர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், திராவிட புலிகள் இயக்க தலைவர் சுப்பிர மணி தலைமையில் கிராம மக்கள் சுமார் 20 பேர், கலெக்டர் அலுவலக வாசல் அருகே அமர்ந்து பட்டா வழங்க கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்த போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், மாவட்ட வருவாய் அதிகாரி 3 மாதத்தில் பட்டா வழங்குவதாக கூறினார். ஆனால் இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். எனினும் அவர்கள் கலைந்து செல்ல வில்லை. இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.






