search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பெண்கள் வழிபாடு
    X

    ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அஸ்தம்பட்டி மாரியம்மனுக்கு வளையல் அலங்காரம், எல்லைபிடாரி அம்மனுக்கு முத்தங்கி, நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மனுக்கு பவள கற்கள் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.  

    ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பெண்கள் வழிபாடு

    • ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம்:

    ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ், பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.

    வளையல் அலங்காரம்

    சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அதிகாலையில் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் 1 லட்சம் வளை யல்களைக் கொண்டு அம்மன் சிலை முழுவதும் வளையல்களால் அலங்கா ரம் செய்யப்பட்டது. மேலும் கோவில் பிரகாரம் அனைத்து இடங்க ளிலும் வளையல்களால் அலங்க ரிக்கப்பட்டது. அம்மனை காண அப்பகு தியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

    தங்க கவசம்

    இதேபோல எல்லை பிடாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் தங்க கவசம் சாத்துப்படி வைபவம் நடைபெற்றது. பெரிய எல்லை பிடாரி கருவறை அம்மனுக்கு முத்துக்களால் ஆன அங்கியை கொண்டு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மந்திரங்கள் ஓத அர்ச்சனைகள் நடை பெற்றது. இதில் அப்பகு தியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நெத்திமேடு தண்ணீர் பந்தல் ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் பவள கற்கள் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

    இதே போல சேலம் மாநகரில் அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கிச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களை சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. குறிப்பாக மணியனுர் காளியம்மன் கோவிலில் ஆயிரம் கண் அலங்காரம் செய்திருந்தனர். 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனை காண வந்த பக்தர்கள் அனை வருக்கும் மாங்கல்யம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×