search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டு எறிதல் போட்டியில் 2-வது இடம் பெற்ற ஏற்காடு மாணவி
    X

    குண்டு எறிதல் போட்டியில் 2-வது இடம் பெற்ற ஏற்காடு மாணவி

    • சேலம் மாவட்டம் ஏற்காடு அந்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் -பாக்கி யலட்சுமி தம்பதியின் மகள் செல்வி இன்பத்தமிழ்.
    • மாற்றுத்திறனாளியான இவர் விளையாட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் குண்டு எறிதல் போட்டியில் பல்வேறு பரிசுகளை வென்று வருகிறார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அந்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் -பாக்கி யலட்சுமி தம்பதியின் மகள் செல்வி இன்பத்தமிழ். (வயது 17).

    இம்மாணவி நாகலூர் அரசு மாதிரி பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். உயரம் குறைந்த மாற்றுத்திறனாளியான இவர் விளையாட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் குண்டு எறிதல் போட்டியில் பல்வேறு பரிசுகளை வென்று வருகிறார்.

    இந்திய அளவில் 2-ம் இடம்

    சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற குட்டை மனிதர்களுக்கான விளை யாட்டு போட்டியில் குண்டு எறிதலில் தன் திற மையால் இன்பத்தமிழ் இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்தார். அதே போட்டியில் சேலம் வலசை யூரை சேர்ந்த மாணவி வெண்ணிலா 3-ம் இடம் பிடித்தார்.

    இதன் மூலம் மாணவி இன்பத்தமிழ் , நாளை முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை ஜெர்மனி நாட்டில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உலக அளவில் 8-ம் முறையாக நடைபெறும் குண்டு எறிதல் போட்டிக்கு தகுதி பெற்றார். இதில் பங்கேற்பதற்காக மாணவி இன்பத்தமிழ் இன்று காலை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ஜெர்மனிக்கு சென்றார்.

    அவருடன் அதே போட்டியில் 3-ம் இடம் பிடித்த மாணவி வெண்ணிலா, அவர்களது பயிற்சியாளர் உலகநாதன், உடற்கல்வி ஆசிரியர் ராேஜந்திரன் சென்றனர்.

    நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்

    இது பற்றி மாணவி இன்பத்தமிழ் கூறியதாவது:-

    என்னுடைய திறமைக்கு அடித்தளமாக இருந்த தாய்- தந்தை, ஆசிரியர்கள், நண்பர்கள், எனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஜெர்மன் நாட்டில் நடக்க இருக்கும் போட்டியில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று தெரிவித்தார்.

    ஊக்கத் தொகை குவிகிறது

    போட்டியில் சாதனை படைத்த மாணவி இன்பத்தமிழை ஏற்காடு பகுதி கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.

    சிவலிங்கம், மாணவிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாணவிக்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொடுப்ப தாக உறுதி அளித்தார்.

    மேலும் ஏற்காடு ஒன்றிய தி.மு.க சார்பாக மாணவி இன்பத்தமிழுக்கு ஏற்காடு ஒன்றிய செயலாளர் கே.வி ராஜா வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார். அதுபோல் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை அமைப்பாளர் எம்.வி.எஸ் பாபு வாழ்த்து கூறி ஊக்கத் தொகை வழங்கி உதவிகள் தேவைப்படும் போது விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் செய்து தரப்படும் என்ற உறுதி அளித்தார். மஞ்சகுட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா ராமசந்திரன் வாழ்த்து தெரிவித்து ஊக்கதொகை வழங்கினார்.

    Next Story
    ×