என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சேலம் மாவட்டத்தில் பாசன வசதியை மேம்படுத்த 4 இடங்களில் தடுப்பணைகள் சேலம் மாவட்டத்தில் பாசன வசதியை மேம்படுத்த 4 இடங்களில் தடுப்பணைகள்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/14/1791568-1-salem-ias.jpg)
காடையாம்பட்டி ஒன்றியம் செட்டிப்பட்டி ஏரி பருவமழை காரணமாக நிரம்பியுள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கூடுதல் கலெக்டர் பாலசந்தர், மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆகியோர் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பாசன வசதியை மேம்படுத்த 4 இடங்களில் தடுப்பணைகள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எடப்பாடியை அடுத்த பக்கநாடு கிராமம், அதுவாபட்டி அருகில் கருமத்தான்கிணறு ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி ரூ.47.32 லட்சம் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
- இத்தடுப்பணை மூலம் 10 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத் துறையின் மூலம் எடப்பாடியை அடுத்த பக்கநாடு கிராமம், அதுவாபட்டி அருகில் கருமத்தான்கிணறு ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி ரூ.47.32 லட்சம் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணை மூலம் 10 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
அதேபோன்று ஓமலூர் சரபங்கா ஆற்றின் குறுக்கே ஓமலூர் மற்றும் பச்சனம்பட்டி கிராமங்களில் உள்ள 227 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும் வகை யில் தடுப்பணை கட்டும் பணி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 88 சதவீதப்பணிகளும் தற்போது நிறைவடைந்து மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், 74 கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுவேதாதியின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, தொழில்நுட்ப ஒப்புதலுக்காக நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கணவாய்காடு அருகே சுவேதா நதியின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, தொழில்நுட்ப ஒப்புத லுக்காக மதிப்பீடு அனுப்பப்படவுள்ளது. ஒப்புதல் கிடைக்கப்பெற்ற தும். பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சேலம் மாவட்டத்தில் நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 301 கசிவு நீர் குட்டைகள் ரூ.16.86 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய அமிர்தகுளங்கள் உருவாக்குதல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தில் 52 அமிர்தகுளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உரு வாக்கப்பட்டுள்ள குளங்களின் கரைகளில் மரக்கன்றுகளை நடுதல், பனை விதைகளை நடுதல் மற்றும் குளத்தின் அருகிலேயே பூங்காக்களை உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.