என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல்லை புறக்கணிக்கும் சேலம் ரெயில்வே கோட்டம்
- அடுத்த வாரம் திங்கள் முதல் ஏப்ரல் மாதம் கடைசி திங்கள் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
- நாமக்கல்லை சேர்ந்த 2 பார்லிமெண்ட் உறுப்பி னர்கள், 1 மத்திய இணை அமைச்சர் இருந்தும், நாமக் கல்லை சேலம் கோட்டம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
நாமக்கல்:
கோடை காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - தஞ்சாவூர் இடையே, அடுத்த வாரம் திங்கள் முதல் ஏப்ரல் மாதம் கடைசி திங்கள் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
இந்த வாராந்திர ரெயில் ஹூப்ளியில் இருந்து ஹரிஹர், தாவண்கரே, அர்சிகரே, தும்கூர், யஸ்வந்த்பூர், பெங்களூரு, பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக இயங்கவுள்ளது.
இந்த சிறப்பு ரெயிலுக்கு, நாமக்கல் ரெயில் நிலையத் தில் மட்டும் நிறுத்தம் வழங் கப்படவில்லை. நாமக்கல் நீங்கலாக மற்ற அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ரெயில் நின்று செல் லும். இது நாமக்கல் பகுதியில் வசிக்கும் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத் தியுள்ளது.
சமீப காலமாக நாமக்கல் வழியாக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்கள், நாமக்கல் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரெயிலுக்கு நாமக்கல் நிறுத்தத்தை மட்டும் புறக்கணிப்பதா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழும்புகிறது.
நாமக்கல்லில் இருந்து தஞ்சாவூர் செல்ல தற்போது ரெயில் வசதி இல்லை. இந்த சிறப்பு ரெயிலுக்கு நாமக் கல்லில் நிறுத்தம் கொடுத் தால் நாமக்கல்லில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் செல்ல வசதியாக இருக்கும்.
நாமக்கல்லை சேர்ந்த 2 பார்லிமெண்ட் உறுப்பி
னர்கள், 1 மத்திய இணை அமைச்சர் இருந்தும், நாமக் கல்லை சேலம் கோட்டம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் வரும் காலங்களில் நாமக்கல் ரெயில் நிலை யத்தை அனைத்து ரெயில் களும் படிப்படியாக புறக்க ணிக்கும் அபாயம் உருவாகும்.
இந்த பிரச்சினையில், மத்திய இணை அமைச்சர் முருகன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜ் ஆகியோர் உடனடியாக தலையிட்டு நாமக்கல் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களையும், நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நிரந்தரமாக தீர்வு காண வேண்டும்.
மேலும் வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கவுள்ள நிலையில் உடனடியாக நாமக்கல் நிறுத்தத்தை வெளியிட சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் பகுதியில் உள்ள ரெயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல் ஒரு மாவட்டத்தின் தலைநகர் மட்டும் அல்ல. லாரி உள்ளிட்ட மோட்டார் தொழில் மற்றும் கோழிப்பண்ணை, கோழி முட்டை உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடம் வகித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டாவது நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு தெற்கு ரெயில்வே முக்கியத்துவம் கொடுக்க முன்வரவேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்