search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் நட்சத்திரங்கள், பொம்மைகள் விற்பனை தீவிரம் - உலக சாதனை முயற்சியாக 100 கிலோ கேக் தயாரிப்பு
    X

    உலக சாதனை முயற்சியாக 100 கிலோவில் தயாரிக்கப்பட்ட தங்க முலாம் கொண்ட பிரமாண்ட கேக்.

    நெல்லையில் நட்சத்திரங்கள், பொம்மைகள் விற்பனை தீவிரம் - உலக சாதனை முயற்சியாக 100 கிலோ கேக் தயாரிப்பு

    • கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகள் முன்பு கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களை தொங்கவிடுவது வழக்கம்.
    • 100 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட பிரமாண்ட கேக் ஒன்று பாளையில் உள்ள தனியார் ஓட்டலில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது

    நெல்லை:

    கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந் தேதி கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகள் முன்பு கிறிஸ்துமஸ் நட்சத்தி ரங்களை தொங்கவிடுவது வழக்கம்.

    வீடுகள் மட்டுமின்றி தேவாலயங்கள், கடைகளிலும் ஸ்டார்கள் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்.

    கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களையும் விதவிதமான வண்ணங்களில் வீடுகளில் வைப்பது வழக்கம்.

    ஒவ்வொரு தேவாலயங்களில் இருந்தும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் பாதிரியார் தலைமையில் பங்கு மக்கள் வீடுகளுக்கு ஊர்வலமாக சென்று பரிசுபொருட் களையும், வாக்குத்தத்தம் அட்டைகளையும் வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்வார்கள்.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உள்ளிட்ட அலங்கார பொருட்களின் விற்பனை நெல்லையில் சூடுபிடித்துள்ளது.

    நெல்லை, பாளை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் மற்றும் விளக்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. காகிதத்தால் ஆன நட்சத்தி ரங்கள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நட்சத்தி ரங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    விதவிதமான நட்சத்திரங்கள், டிராகன், லோட்டஸ், சொரூபம், கிரேப்ஸ் பந்து உள்ளிட்ட வடிவங்களில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கிறிஸ்த வர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இதேபோல் கிறிஸ்துமஸ் மரங்களும், பொம்மைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே உலக சாதனை முயற்சியாக 100 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட பிரமாண்ட கேக் ஒன்று பாளையில் உள்ள தனியார் ஓட்டலில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கில் 400 மில்லி கிராம் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல் 5 கிலோ எடையிலான சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 250 மில்லி கிராம் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும் 4 அடியில் பிரமாண்ட தோசை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 100 மில்லி கிராம் தங்கம் சேர்க்க ப்பட்டுள்ளது. இவற்றை தயாரிப்பதற்காக 100 கிலோ கேக்கிற்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரமும், 5 கிலோ சாக்லேட்டிற்கு ரூ.1 லட்சமும், தோசைக்கு ரூ.22ஆயிரத்து 230ம் செலவிடப்பட்டுள்ளது.

    இந்த தோசை பாளையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.100 கிலோ கேக், 5 கிலோ சாக்லேட் கிறிஸ்துமஸ் பண்டிகை வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×