search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுதபூைஜயை முன்னிட்டு சேலத்தில் வெல்லம் விற்பனை அதிகரிப்பு
    X

    ஆயுதபூைஜயை முன்னிட்டு சேலத்தில் வெல்லம் விற்பனை அதிகரிப்பு

    • சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
    • ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 100 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.


    சேலம்:


    தமிழகத்தில் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கரும்பு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும், இதைத்தவிர தனியார் சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கும் விவசாயிகள் அனுப்புகின்றனர்.


    சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 100 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின்போது வெல்லம் தேவை அதிகரிக்கும்.


    இந்த நிலையில் வருகிற 4-ம் தேதி ஆயுதபூைஜ விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது பெரும்பாலான வீடுகளில் சாமிக்கு படையலிட்டு பூஜை ெசய்து வழிபடுவார்கள். இதையொட்டி வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வழக்கமாக நடக்கும் விற்பனையில் இருந்து 30 சதவீதம் வெல்லத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.


    சேலத்தில் தற்போது 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1300 முதல் ரூ.1350 என விற்பனை செய்யப்பட்டது. வருகிற தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு தயாரிக்க வெல்லத்தின் தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளனர்.


    Next Story
    ×