என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்
- வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழா போல் காட்சியளித்தது.
- சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதிகளில் கரும்புகள், மஞ்சள் குலைகள், விற்பனை களை கட்டி உள்ளது.
சேலம்:
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
பொங்கல் கொண்டாட்டம்
அனைவரும் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் பொங்கி மேலே வரும்போது, அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி தங்கள் பொங்கல் வாழ்த்துக்களை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொள்வார்கள். பொங்கல், கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காய் பழங்களைக் கொண்டு இறைவனுக்கு படையல் இட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்.
இதையொட்டி, சேலத்தில் கரும்பு, மஞ்சள், பூைஜ பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்ற வருகிறது. அதுபோல் ஜவுளி நிறுவனங்களில் புது துணி எடுக்க பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.
கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழா போல் காட்சியளித்தது.
ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்தி னருடன் ஜவுளி எடுக்க கடைவீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். சேலம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலத்திற்கு வந்திருந்தனர். சிறு, சிறு ஜவுளி கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்தது.செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், லீ பஜார், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதிகளில் கரும்புகள், மஞ்சள் குலைகள், விற்பனை களை கட்டி உள்ளது.
தற்காலிக கடைகள் ஆங்காங்கே அமைத்து விற்பனைக்கு மஞ்சள் குலைகள், கரும்புகள் குவித்து வைத்துள்ளனர். தினசரி சந்தைகள், வாழை பழங்கள் விற்பனை கடைகளும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஊர்காவல் படை, ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீசார் அதிகளவு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். பல பகுதிகளில் பொறுத்தப்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் வாகனங்களில் வந்து அடிக்கடி ரோந்து பணியில் வந்து கண்காணித்தப்படி சென்றனர்.
மாடுகளுக்கான அலங்கார பொருட்கள்
16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து
கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்ப னைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து
வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ளவலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் அயோத்தி யாப்பட்ட ணத்திற்கு வந்து தங்கள் கால்ந டைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்க யிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்