search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பா நடவு பணிகள் தீவிரம்
    X

    சம்பா நாற்று பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

    சம்பா நடவு பணிகள் தீவிரம்

    • சம்பா நடவு பணிகளும் நாற்று பறிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வேளாண் கடன்கள் எளிதில் கிடைக்காத நிலை இருந்த போதிலும் உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் குறுவை அறுவடை ஏறக்குறைய நிறைவடைந்து விடும் நிலையில் உள்ளது.

    தாம தமாக நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

    இது ஒரு புறம் இருக்க பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ஏரி பாசன பகுதிகளான செங்கிப்பட்டி பகுதியிலும் சில கிராமங்களில் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சம்பா நடவு பணிகளும் நாற்றுப் பறிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களில் தாளடி நடவு பணிகளும் மெதுவாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களை உழவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

    இன்னும் ஒரு சில நாட்களில் பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் முழு வீச்சில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் நடைபெறும் என்று தெரிய வருகிறது.

    விவசாயிகள் உரத் தட்டுப்பாடு, கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கடன்கள் எளிதில் கிடைக்காத நிலை இருந்த போதிலும் உழவுப் பணிகளிலும் வேளாண் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்ற அறிவிப்பு வந்துள்ள நிலையில் அதற்கு முன்னதாக நடவு பணிகளை செய்து விட வேண்டும் என்று விவசாயிகள் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×