என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மார்க்கெட்டுகளில் சாம்பார் வெங்காயம் ரூ.180-ஆக உயர்வு
- பாளை மார்க்கெட்டில் இன்று இஞ்சி விலை மேலும் அதிகரித்தது.
- ஜண்டா ரக வெங்காயம் கிலோ ரூ.180-க்கு விற்பனையாகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.
வடமாநிலங்களில் பெய்து வரும் மழை, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி, சாம்பார் வெங்காயம், இஞ்சி, மிளகாய் உள்ளிட்டவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில் பாளை மார்க்கெட்டில் இன்று இஞ்சி விலை மேலும் அதிகரித்தது. நேற்று கிலோ ரூ.300-க்கு விற்ற நிலையில் இன்று மேலும் ரூ.30 அதிகரித்து கிலோ ரூ.330 ஆக உயர்ந்தது. இதேப்போல தக்காளி கிலோ ரூ.120-க்கும், குண்டு மிளகாய் ரூ.130-க்கும், சாம்பார் மிளகாய் ரூ.120- க்கும் விற்பனையானது.
சாம்பார் வெங்காயம் தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. இதில் ஜண்டா ரக வெங்காயம் கிலோ ரூ.180-க்கும், நாட்டு வெங்காயம் ரூ.160-க்கும் விற்பனையாகிறது.
பீன்ஸ் கிலோ ரூ.100, அவரை ரூ.80, கேரட் ரூ.60க்கு விற்பனையாவதாக வியாபாரி கள் தெரிவித்தனர். அதே நேரம் புடலங்காய், பீட்ரூட், சவ்சவ் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை குறைவாக இருப்பதாகவும் அவை கிலோ ரூ.40க்கும் விற்கப்படு வதாக வியாபாரிகள் கூறினர்.
பாவூர்சத்திரம்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.150, மிளகாய் ரூ.120க்கும் விற்பனையாகிறது.