என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது- கலெக்டரிடம், விவசாயிகள் வலி
- மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் அள்ளப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்.
- கிராம சபை கூட்டத்தில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க உத்தேசிக்க பட்டு இருந்தது.
இதற்கு எதிராக விவசாயிகள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அனுமதிக்கப்படவில்லை.
தற்போது இதுகுறித்து மணல் குவாரியில் ஆய்வு நடத்தி ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் உத்தேசிபட்டிருக்கும் மணல் குவாரி அமைவிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது நீர்வள ஆதாரத்துறை, கனிமவளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைவிடம் உள்ள இடத்தை காவிரி ஆற்றில் இறங்கி நடந்து சென்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.
அப்போது பவனமங்கலம் கிராம மக்கள் சார்பில் வழக்கறிஞர் ஜீவகுமார், பாலகணேசன், பொன்னு ராமன் ஆகியோர் கலெக்டரிடம் பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று மனு ஒன்றை அளித்தனர்.
இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பவனமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பாசன வசதி அளிக்கும் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டு இங்குள்ள மணல் அள்ளப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, ஊரின் குடிநீர்.
மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு மணல் குவாரி அமைக்க முயற்சி செய்தபோது பவனமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எனவே எங்கள் கிராம மக்களின் நலனுக்காகவும் கிராம சபைமுடிவுகளுக்கும் எதிராக பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரி வித்தார்.
கடந்த 2018ம் ஆண்டு பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பு குறித்த அறிவிப்பு பலகையும், மணல் குவாரிக்காக அடையாளம் இடப்பட்டு நடப்பட்ட சிமெண்ட் கம்பங்களும் காவிரி ஆற்றில் அப்படியே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்