என் மலர்
உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுை கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
தச்சநல்லூர் சந்தனமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பூர்ணாகுதி, பூஜையுடன் தொடங்கியது.
- விநாயகப் பெருமானுக்கும், மூலஸ்தான மூர்த்தி களுக்கும் சிறப்பு மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் பிராயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சந்தனமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பூர்ணாகுதி, பூஜையுடன் தொடங்கியது. மாலையில் சாஸ்தா கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு சந்திர ஹோரையில் யந்திர ஸ்தானம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் பூஜை நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டாம் கால யாக பூஜையுடன், கும்பபூஜை, பிம்பசுத்தி, வேதிகை பூஜை, பூர்ணாகுதியாக சாலை நிறை தீபாராதனை நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கும்பம் எழுந்தருளி விமானம் மஹா கும்பாபி ஷேகம் நூதன ஆலயம், நூதன விமானம், நூதன விக்ரகம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமா னுக்கும், மூலஸ்தான மூர்த்தி களுக்கும், பரிவார தெய்வங்க ளுக்கும் மகா கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.