search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல்- ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
    X

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல்- ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

    • முக்கியத்துவம் வாய்ந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கையின் அருகில் இடம் பெறவிருப்பது பாராட்டுதலுக்குரியது.
    • தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய விடுதலையின் அடையாளமாகவும், ஆட்சி அதிகார மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும் விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோல், பிரதமரால் நாளை திறக்கப்படவுள்ள புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக இடம் பெறவிருக்கிறது என்பது தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

    இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கையின் அருகில் இடம் பெறவிருப்பது பாராட்டுதலுக்குரியது.

    புதிய பாராளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவர் அவர்களின் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிரந்தரமாக இடம்பெறுவது என்பதும், நவீன வசதிகள் கொண்ட புதிய பாராளுமன்றக் கட்டிடம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரால் திறந்து வைக்கப்படவுள்ளது என்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

    இதனை சில எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல. இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை உருவாக்கி, தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அதில் செங்கோலை இடம் பெறச் செய்த பிரதமருக்கு என்னுடைய பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×