search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் 10 ரூபாய் நாணயத்தை விழுங்கிய பள்ளி மாணவன்
    X

    பொன்னேரியில் 10 ரூபாய் நாணயத்தை விழுங்கிய பள்ளி மாணவன்

    • பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பத்து ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.
    • உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சை பெற வரும்போது உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவன் திருவேங்கடபுரம் மீஞ்சூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பத்து ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பள்ளி ஆசிரியர் பெற்றோருக்கு தகவல் கொடுத்து உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்க தெரிவித்தார்.

    அதன்பேரில் அரசு மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் ஊழியர்கள் இல்லாததால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.

    இதனால் கடும் வேதனைக்குள்ளான மாணவனின் பெற்றோர் தனியார் எக்ஸ்ரே சென்டரில் சென்று பரிசோதனை செய்து மருத்துவரிடம் காண்பித்தனர். அப்போது நாணயம் வயிற்றினுள் சென்றதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

    பொன்னேரியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கிறார்கள். அவசர மருத்துவ தேவைக்கு வரும்போது போதிய மருத்துவர்கள் இல்லை. எக்ஸ்ரே, ஸ்கேன் வசதி இருந்தும் நோயாளிகள் வெளியில் சென்று எடுத்து வருகிறார்கள். முழு உடல் பரிசோதனை ஸ்கேன் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ரத்தவங்கி செயல்படாமல் மூடியே இருக்கிறது. உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சை பெற வரும்போது உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்.

    இதனால் போகும் வழியிலே உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×