என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறப்பு - உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்
- ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிக்கு மாணவ-மாணவிகள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்தனர்.
- நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 2065 பள்ளிகள் திறக்கப்பட்டது. இன்று முதல் 2022-23-ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு தொடங்கியது.
ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிக்கு மாணவ-மாணவிகள் காலையிலேயே ஆர்வத்து டன் வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிகள் திறக்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளிகள் திறப்பு மற்றும் முடியும் நேரம் சிறிது மாறுபட்டது.
பள்ளிகள் தொடங்கி யதும் மாணவ- மாணவி களுக்கு இலவச பாடப், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதனை அவர்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்துப் பார்த்தனர். வகுப்பு தொடங்க ப்பட்டதும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்கவில்லை. மாறாக அரசு வழிகாட்டுதல் படி மாணவ- மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. நல்லொழுக்கம் மற்றும் உளவியல்ரீதியான வகுப்புகளும் நடத்தப்ப ட்டன.
இந்த வாரம் முழுவதும் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.அடுத்த வாரம் முதல் வழக்கமான பாடங்கள் நடத்தப்பட உள்ளன.இதுதவிர பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது. மீண்டும் ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் தஞ்சையில் பள்ளிகள் அமைந்திருக்கும் பகுதிகள் பரபரப்பாக இயங்கின. வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும், 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.