என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்
- பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மதச்சார்பின்மை, அரசியலையமைப்பு சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றை காத்திட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து தமிழக முழுவதும் எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் அப்துல் காதர் தொகுப்புரை வழங்கினார்.
தஞ்சை சட்டமன்றத் தொகுதி தலைவர் முகமது ரபீக் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ரியாஸ் அகமது தொடக்க உரையாற்றினார். மாநில பேச்சாளர் பிலாலுதீன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், இந்தியாவின் பன்முகத் தன்மையை காத்திட வேண்டும், மதச்சார்பின்மை, அரசியலையமைப்பு சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றை காத்திட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட பொருளாளர் சர்புதீன், விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில பேச்சாளர் தஸ்லிமா ஷெரிப், தஞ்சை சட்டமன்ற தொகுதி செயற்குழு உறுப்பினர் முகமது தாகிர், தமிழ் தேச தன்னுரிமைக் கட்சி பொதுச் செயலாளர் பனசை அரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.