என் மலர்
உள்ளூர் செய்திகள்

உத்தண்டியில் கடல் சீற்றம்- குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது
- பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
- உத்தண்டி குடியிருப்பு பகுதி சாலை முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கிய நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் மற்றும் கிழக்கு கடற்சாலையில் கடல் சீற்றம் காணப்பட்டது. உத்தண்டியில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது.
அந்த பகுதி சாலை முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டது. பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பாதிப்பை பாதித்ததில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இங்குள்ள குடியிருப்புகள் அடுக்குமாடி குடியிருப்புகள் என்பதால் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.
Next Story






