search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்திரபாடி கிராமத்துக்குள் புகுந்த கடல்நீர்
    X

    கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

    சந்திரபாடி கிராமத்துக்குள் புகுந்த கடல்நீர்

    • கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்தது.
    • கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான சந்திரபாடியில் 2500 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள இக்கிராமத்தில் மழை வெள்ளம், புயல் ஏற்படும் போதும் கடல் சீற்றமாக காணப்படும் காலங்களில் கடல்நீர் உட்புகுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால், தங்கள் பகுதியில்கடல் சீற்றத்தி ன்போது கடல் நீர் உட்புகுந்து பாதிக்கப்படுவதாகவும் சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×