என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு சீல் வைப்பு
- மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பி.எப்.ஐ அமைப்புக்கு தடைவிதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
- ஏற்கனவே சென்னை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவை:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து உத்தரவை பிறப்பித்தது.
மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பி.எப்.ஐ அமைப்புக்கு தடைவிதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த பி.எப்.ஐ அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சென்னை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இன்று கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகம் மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு தெற்கு தாசில்தார் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.