search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிமெண்ட் காரைகள் பெயர்ந்து காணப்படும் சீர்காழி தாசில்தார் அலுவலகம்
    X

    மேற்காரைகள் யெர்ந்துள்ள அலுவலக கட்டிடம்.

    சிமெண்ட் காரைகள் பெயர்ந்து காணப்படும் சீர்காழி தாசில்தார் அலுவலகம்

    • ரூ.1.83 கோடி செலவில் கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டது.
    • பணியில் இருக்கும் ஊழியர்கள் மீது காரைகள் பெயர்ந்து விழும் சூழல் நிலவுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகாமையில் தாசில்தார் அலுவலகம் இயங்கிவந்தது. 94 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு சான்றிதழ் தேவைகளுக்காக தாசில்தார் அலுவலகம் வந்து செல்கின்றனர்.

    பழமையான இந்த கட்டிடத்தை அகற்றி வேறு புதிய கட்டிடம் கட்ட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2018-ம் ஆண்டில் ரூ.1.83 கோடி செலவில் கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டது.

    இதனையடுத்து தாசில்தார் அலுவலகம் பிடாரி தெற்கு வீதியில் உள்ள சட்டைநாதர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருமண அரங்கில் இடம் மாற்றம் செய்யப்பட்டு அது முதல் இயங்கிவருகிறது.

    அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மறு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.4 கோடி வரை கூடுதல் நிதி கோரப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    இதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏதும் இல்லாத நிலையில் உள்ளது.

    அலுவலகத்தின் உள்ளேயும் ஆஸ்பெட்டாஸ் கூரை உடைந்தும், அதன் கீழ் உள்ள தெர்மாகோல் பால்சீலிங் வேலைபாடுகள் உடைந்தும் தொங்கிகொண்டுள்ளது.

    வளாகத்தின் சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் அவ்வபோது உள்ளே புகுந்து அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

    தற்போது துணை வட்டாட்சியர்கள் அலுவலக கான்கிரீட் மேற்கூரைகள் சிமென்ட் காரைகள் அவ்வபோது பெயர்ந்து திடிரென கீழே விழுந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது.பணியில் இருக்கும் அலுவலர்கள், ஊழியர்கள் வந்து செல்லும் பொதுமக்கள் மீது சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் கூறுகையில், சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மேற்கூரை சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் வேறு கட்டடத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை மாற்றிடவும், உடனடியாக புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்திடவும் வேண்டும் என்றார்.

    Next Story
    ×