search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணி-கலெக்டர் தகவல்
    X

    தென்காசியில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணி-கலெக்டர் தகவல்

    • வேட்பு மனு 2 படிவங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும், உள்ளாட்சி அலுவலகங்களிலும் கிடைக்கும்.
    • வாக்கு எண்ணிக்கையானது தேர்தல் முடிவுற்றவுடன் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகரக பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளுக்காக மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பி னர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வருகிற 23-ந்தேதி நடத்தப்பட உள்ளது.

    இத்தேர்தலில் ஊரகப்பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பி னர்களில் இருந்து 7 உறுப்பினர்களும், நகர பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து மொத்தம் 5 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வேட்பாளர் அல்லது அவரது முன்மொழிவாளரால் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி வரை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.

    வேட்பு மனு 2 படிவங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவல கங்களி லும், உள்ளாட்சி அலுவல கங்களிலும் கிடைக்கும். வேட்புமனு பரிசீலினையானது 12-ந்தேதி 11 மணிக்கு நடைபெறும். வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பினை வருகிற 14-ந்தேதி அன்று 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கலாம். தேர்தலில் வாக்குப்பதிவு இருக்குமானால் 23-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடை பெறும்.வாக்கு எண்ணிக்கையானது தேர்தல் முடிவுற்றவுடன் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×