search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வு
    X

    அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வு

    • அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் தேர்விற்கான நேர்காணல் நடைபெறுகிறது.
    • சேலம் தலைமை அஞ்சலகம் மூன்றாவது தளத்தில் உள்ள கிழக்கு கோட்ட அலுவலகத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் வருகிற 7-ந் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் தேர்விற்கான நேர்காணல் நடைபெறுகிறது.

    எனவே, ஆர்வம் உள்ள அனைவரும் அன்றைய தினம் சேலம் தலைமை அஞ்சலகம் மூன்றாவது தளத்தில் உள்ள கிழக்கு கோட்ட அலுவலகத்தில் தங்களின் வயது, கல்வி சான்றிதழ், ஆதார், பான் கார்டு நகல் மற்றும் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் நேர்கா ணலில் கலந்து கொள்ளலாம்.

    நேர்காணலில் பங்கேற்க 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த நேர்காணலில் ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

    தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் சேலம் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் பணி புரிய வேண்டும். மேலும், ரூ.5 ஆயிரம் வைப்பு தொகை செலுத்த வேண்டும். நேரடி முகவர்கள் நியமனம் இலாகா விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். அஞ்சல் கண்காணிப்பாளரின் முடிவே இறுதியானது.

    இந்த தக வலை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×