என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கு உயர் ரக போதை மருந்து விற்பனை கைதான என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேரிடம் தொடர் விசாரணை
- தமிழகத்தின் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
- உயர்ரக போதை பொருளை வாங்கி வந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.
சேலம்:
சேலம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் அப்பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
இதற்கிடையே கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர்தர ரக போதை பொருளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து போதை தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளாவை சேர்ந்த வாலிபர்களும் கல்லூரி மாணவர்களும் சீரகபாடியில் தங்கி இருந்து மொத்தம் பேட்டமையின் என்ற உயர்ரக போதை பொருளை விற்பனை செய்வது தெரிய வந்தது . நேற்று அவர்கள் தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்த போலீசார் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஆலன் கே பிலிப் (23), பி.இ. 2-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது மாணவர் மற்றும் பி.இ. இறுதி ஆண்டு படித்து வரும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த சித்தாரப்பட்டியை சேர்ந்த மாணவர் உள்பட 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர் .
அப்போது பெங்களூரில் இருந்து உயர்ரக போதை பொருளை வாங்கி வந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. கண்ணாடி இழை போன்ற ஒரு கிராம போதை பொருளை கசக்கி பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை போதை இருக்கும் என கூறப்படுகிறது .
அவரிடம் இருந்து 35 ஆயிரம் மதிப்பிலான போதை பொருள் ,நவீன எடை எந்திரம் மற்றும் போதைப்பொருள் டெஸ்டிங் மெஷின் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களாக இந்த மாணவர்கள் அங்கே போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது . தொடர்ந்து 3 பேரிட்மௌம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் 3 பேரின் பிண்ணணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? இவர்கள் சேலம் தவிர வேறு எங்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்களா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்